IPL 2022: காயம் பெரிது.. அடுத்த சில போட்டிகளில் ஆடமுடியாது..! சிஎஸ்கே தலையில் இடியாய் இறங்கிய தகவல்

Published : Apr 25, 2022, 06:30 PM IST
IPL 2022: காயம் பெரிது.. அடுத்த சில போட்டிகளில் ஆடமுடியாது..! சிஎஸ்கே தலையில் இடியாய் இறங்கிய தகவல்

சுருக்கம்

கணுக்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் சிஎஸ்கே வீரர் மொயின் அலி ஆடமுடியாது.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவிய நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளது.

ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் வெற்றிப்பயணத்தை தொடர்ந்து பிளே ஆஃபிற்கு முன்னேறும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே அணி இன்று பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு விரும்பத்தகாத செய்தி கிடைத்துள்ளது.

சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி கணுக்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி ஏலத்தில் அதிகமான தொகை கொடுத்து வாங்கிய தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த சீசன் முழுவதுமாகவே ஆடவில்லை. அவர் இல்லாதது சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவும் காயம் காரணமாக ஐபிஎல்லில் ஆடவில்லை. இந்நிலையில், தற்போது சிஎஸ்கே அணியின் முக்கியமான ஆல்ரவுண்டரான மொயின் அலியும் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் ஆடமுடியாத நிலை உள்ளது. இது சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!