RR vs CSK: மொயின் அலி சாதனை அரைசதம்.. பவர்ப்ளேயில் RR-ஐ அலறவிட்டார்.. போல்ட்டின் ஒரே ஓவரில் 26 ரன்கள்

Published : May 20, 2022, 08:15 PM IST
RR vs CSK: மொயின் அலி சாதனை அரைசதம்.. பவர்ப்ளேயில் RR-ஐ அலறவிட்டார்.. போல்ட்டின் ஒரே ஓவரில் 26 ரன்கள்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் மொயின் அலி 19 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் போட்டி. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளுமே தலா ஒரு மாற்றங்களுடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக அம்பாதி ராயுடுவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜிம்மி நீஷமுக்கு பதிலாக ஷிம்ரான் ஹெட்மயரும் சேர்க்கப்பட்டனர்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரனா, முகேஷ் சௌத்ரி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா.

முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே வெறும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 2வது ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டது. 3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி, 4வது ஓவரிலிருந்து அடித்து ஆட ஆரம்பித்தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய மொயின் அலி, அஷ்வின் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரையும், டிரெண்ட் போல்ட் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளையும் விளாசினார். 

19 பந்தில் அரைசதம் அடித்து, சிஎஸ்கே அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். ரெய்னா 16 பந்தில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். மொயின் அலியின் அதிரடியால் பவர்ப்ளேயில் 75 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி. பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் டிரெண்ட் போல்ட் வீசிய அந்த ஓவரில் மட்டும் 26 ரன்களை குவித்தார் மொயின் அலி. மொயின் அலி தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test: படிக்கல், ஜுரல் அசத்தல் சதம்! ரன்மலையைக் குவித்த இந்தியா
IND vs SL: வரலாறு படைத்த ஜடேஜா! WTC கிரிக்கெட்டில் 'நம்பர் 1' நாயகன்! மெகா சாதனை!