RR vs CSK: டாஸ் ரிப்போர்ட்.. ராஜஸ்தான் அணியின் மேட்ச் வின்னர் கம்பேக்..! சிஎஸ்கே அணியிலும் ஒரு மாற்றம்

By karthikeyan VFirst Published May 20, 2022, 7:09 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது. அதனால் அந்த அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த சீசனில் சிறப்பாக ஆடிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேவிற்கு எதிராக ஜெயித்தால் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிவிடும். இந்த போட்டியில் தோற்றாலும் அந்த அணிக்கு நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்புள்ளது. ஆனாலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷிவம் துபேவுக்கு பதிலாக அம்பாதி ராயுடு ஆடுகிறார். 

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரனா, முகேஷ் சௌத்ரி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் அதிரடி ஃபினிஷரும் மேட்ச் வின்னருமான ஷிம்ரான் ஹெட்மயர் ஆடுவதால் ஜிம்மி நீஷம் நீக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா.
 

click me!