ஒருநாள் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் அபார சாதனை.! சக்லைன் முஷ்டாக்கை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார்

By karthikeyan VFirst Published Sep 3, 2022, 4:10 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க், ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார்.
 

ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி பெற்ற வெற்றி தான், ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த அணி பெற்ற வெற்றி ஆகும். இந்த வெற்றியின் மூலம் வரலாற்று சாதனை படைத்தது. 

இதையும் படிங்க - AUS vs ZIM 3வது ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலரான மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் மற்றும் கடைசி ஒருநாள் போட்டிகளில் தலா ஒரு விக்கெட்டும், 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த தொடரில் வீழ்த்திய 5 விக்கெட் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் மிட்செல் ஸ்டார்க்.

102 ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 200 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்டார்க். இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் 104 ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியதுதான் சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! தூக்கி எறியப்பட்ட பேர்ஸ்டோ, ராய்

சக்லைன் முஷ்டாக்கின் அந்த சாதனையை முறியடித்து மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் பிரெட் லீ (113 போட்டிகள்) 3ம் இடத்திலும், ஆலன் டொனால்டு (117 போட்டிகள்) 4ம் இடத்திலும், வக்கார் யூனிஸ் (118 போட்டிகள்) 5ம் இடத்திலும் உள்ளனர்.
 

click me!