ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் காயம்.. உலக கோப்பை அணியில் இணைந்தார் சகோதர வீரர்

Published : Jun 12, 2019, 11:58 AM IST
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் காயம்.. உலக கோப்பை அணியில் இணைந்தார் சகோதர வீரர்

சுருக்கம்

மழையால் அடுத்தடுத்து போட்டிகள் ரத்தாவதும், முக்கியமான வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் விலகுவதும் உலக கோப்பை தொடரின் விறுவிறுப்பை குறைத்துவிட்டது.   

உலக கோப்பை தொடரின் விறுவிறுப்பும் பரபரப்பும் குறைந்துள்ளது. மழையால் அடுத்தடுத்து போட்டிகள் ரத்தாவதும், முக்கியமான வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் விலகுவதும் உலக கோப்பை தொடரின் விறுவிறுப்பை குறைத்துவிட்டது. 

மழையால் தொடர்ந்து போட்டிகள் ரத்து செய்யப்படுவது உலக கோப்பை அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்டெய்ன் மற்றும் இங்கிடி ஆகியோர் காயத்தால் விலகினர். ஆஃப்கானிஸ்தான் அணியின் ஷேஷாத், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான் ஆகியோரும் காயத்தால் விலகியுள்ளனர். இவர்களில் ஸ்டெய்ன், ஷேஷாத் ஆகியோர் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளனர். ஆனால் தவான், இங்கிடி ஆகியோர் சில போட்டிகளில் விலகியுள்ளனர். 

இவ்வாறு வீரர்கள் தொடர்ந்து காயமடைந்துவரும் நிலையில், அந்த வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸும் காயத்தால் ஒரு சில போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். எனினும் டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களை வீசினார் ஸ்டோய்னிஸ். அதன்பின்னர் அவரை பரிசோதித்த பிறகு அவருக்கு ஓய்வு தேவை என்பதால் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஷான் மார்ஷின் சகோதரர் மிட்செல் மார்ஷ் இங்கிலாந்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஸ்டோய்னிஸ் ஆடமாட்டார். ஒருசில போட்டிகளுக்கு பிறகு அவர் மீண்டும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!