நீங்கலாம் பிளேயர்ஸ் மாதிரியா இருக்கீங்க..? மிஸ்பா உல் ஹக்கின் அதிரடியால் பதறிப்போய் கிடக்கும் பாகிஸ்தான் வீரர்கள்

By karthikeyan VFirst Published Sep 17, 2019, 12:59 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவரும் தலைமை பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் வீரர்களின் முக்கியமான பிரச்னையை கையிலெடுத்து, முதலில் அதை சரிசெய்ய அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

உலக கோப்பை தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மாற்றப்பட்டது. புதிய தலைமை பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். 

மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியை வலுவான அணியாக வளர்த்தெடுக்கும் பணிகளை அதிரடியாக தொடங்கிவிட்டார். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சர்ஃபராஸ் அகமதுவே தொடர்வார் என்பதை அறிவித்து, கேப்டன் மாற்றம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மிஸ்பா உல் ஹக்.

பாகிஸ்தான் அணியின் முக்கியமான பிரச்னையே ஃபிட்னெஸ் தான். அந்த அணி வீரர்கள், ஆயில் அதிகமான உணவுகள், பிரியாணி, பர்கர், பீட்சா போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள். அது அவர்களது ஃபிட்னெஸை பாதிக்கிறது. உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் கொட்டாவி விட்ட சம்பவம் கூட நடந்தது. இதையடுத்து அவர்கள் பர்கரை தின்னுட்டு வந்து களத்தில் இப்படி கொட்டாவி விடுறாரே என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டார் சர்ஃபராஸ் அகமது. 

அதுமட்டுமல்லாமல் இப்படியொரு அன்ஃபிட்டான கேப்டனைத் தான் பார்த்ததே இல்லை என்றும், டாஸ் போடும்போது சர்ஃபராஸின் தொப்பை வெளியே வந்து விழுந்து கிடந்தது என்றும் முன்னாள் வீரர் அக்தர், சர்ஃபராஸின் ஃபிட்னெஸை கடுமையாக சாடியிருந்தார். 

ஃபிட்னெஸ் குறைபாட்டால்தான் அவர்களால் சரியாக ஃபீல்டிங் செய்ய முடியவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதியிலும் ஃபிட்னெஸிலும் தனது முதற்கவனத்தை செலுத்தியுள்ளார் மிஸ்பா உல் ஹக். அதன்விளைவாக, உணவு பட்டியலில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். 

இனிமேல் பிரியாணி, ஆயில் நிறைந்த உணவுகள், ஸ்வீட் இவையெல்லாம் பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடையாது. அனைத்து வீரர்களுக்கும் உணவு பட்டியல் வழங்கப்படவுள்ளது. அதை பின்பற்றி ஃபிட்டாக இருப்பவர்கள் அணியில் இருக்கலாம்; இல்லையென்றால் கிளம்பலாம் என்ற அளவிற்கு இந்த நடவடிக்கை தீவிரமாக பின்பற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!