ரோஹித் - கோலிக்கு கடும் சவால்.. கோலி கஷ்டப்படுவதை பார்க்க குஷியா ரெடியான கோச்

By karthikeyan VFirst Published Jan 23, 2020, 5:04 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் கடும் சவால் காத்திருப்பதாகவும், அதை அவர்கள் இருவரும் எப்படி எதிர்கொள்கின்றனர் என்று பார்க்க ஆவலாக இருப்பதாகவும் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற கையோடு இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. 

முதல் டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது. உலக கோப்பைக்கு பின்னர் ஆடிய ஒரு தொடரை கூட இழக்காத இந்திய அணி, வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ்(வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடர்), வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்(இந்தியாவில் நடந்த தொடர்), இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அனைத்து தொடர்களையும் வென்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 

இந்திய அணி, எந்த எதிரணியை வீழ்த்த வேண்டுமென்றாலும், ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். இவர்கள் இருவரையும் தான் இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. எனவே மேட்ச் வின்னர்களான இவர்கள் இருவரும் நன்றாக ஆடியாக வேண்டும்.

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20.. விக்கெட் கீப்பர் ராகுல், 6 பவுலர்கள்.. உத்தேச இந்திய அணி

இந்நிலையில், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்வது ரோஹித்துக்கும் கோலிக்கும் பெரிய சவாலாக இருக்கும் எனவும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளருமான மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள மைக் ஹெசன், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் வீசும் முதல் 10-20 பந்துகளை விராட் கோலி எப்படி எதிர்கொள்கிறார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். முதல் 20 பந்துகளை எதிர்கொள்வது கோலிக்கு சவாலான காரியம். அதை எதிர்கொண்டு நல்ல தொடக்கத்தை பெற்றுவிட்டார் என்றால், அதன்பின்னர் ரன்களை அடித்து குவித்துவிடுவார். 

அதேபோல ஆரம்பத்தில் டிரெண்ட் போல்ட்டின் வேகத்தை ரோஹித் எப்படி எதிர்கொள்கிறார் என்று பார்க்கவேண்டும். பந்து ஸ்விங் ஆகும் என்பதால் ரோஹித் எப்படி ஆடுகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம். ஆனால் அதேநேரத்தில் 2014ல் இருந்ததை விட பன்மடங்கு சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என்று மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். 
 

click me!