ஒருவழியா ஒருநாள் அணியில் ராகுலின் பேட்டிங் ஆர்டரை உறுதி செய்தார் கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jan 23, 2020, 2:59 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலும் 3 வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆடிய ராகுலுக்கு ஒரு பேட்டிங் வரிசையை உறுதி செய்துள்ளார் கேப்டன் கோலி. 
 

டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கேஎல் ராகுல், தவான் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இரண்டு அணிகளிலும் தனது இடத்தை உறுதி செய்துகொண்டார். 

அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்ததை அடுத்து, அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து அசத்தினார். இதையடுத்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று கேப்டன் கோலி உறுதி செய்து அறிவித்துவிட்டார். எனவே அணியில் தனக்கான நிரந்தர இடத்தை ராகுல் பிடித்துவிட்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தினார் ராகுல். முதல் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடிய ராகுல், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் ஐந்தாம் வரிசையில் இறங்கினார். அந்த போட்டியில் அதிரடியாக ஆடி 52 பந்தில் 80 ரன்களை குவித்து அசத்தினார். ராகுலின் அதிரடியான பேட்டிங், அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தது. கடைசி போட்டியில் தொடக்க வீரராக இறங்கினார். இவ்வாறு அணி நிர்வாகம் எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்க சொன்னாலும், அந்த ஆர்டரில் இறங்கி அதற்கு நியாயம் செய்தார் ராகுல். 

ராகுல் வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆடியது மற்றும் விக்கெட் கீப்பர் இல்லாத நிலையில், விக்கெட் கீப்பிங் செய்தது ஆகியவற்றின் விளைவாக, ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்பட்டார்.

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20.. விக்கெட் கீப்பர் ராகுல், 6 பவுலர்கள்.. உத்தேச இந்திய அணி

ராகுல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் தான் தொடக்க வீரராக இறங்குவார் என்றும் அவர் தான் விக்கெட் கீப்பர் என்றும் உறுதி செய்தார் கேப்டன் கோலி. 

ஒருநாள் அணியில் பிரித்வி ஷா அணியில் எடுக்கப்பட்டிருப்பதால், ராகுலின் பேட்டிங் ஆர்டர் குறித்த சந்தேகமும் கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், ஒருநாள் அணியில் ராகுலின் பேட்டிங் ஆர்டரை தெளிவுபடுத்தியுள்ளார் கேப்டன் கோலி. ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில், ராஜ்கோட்டில் ஆடிய அதே அணியுடன் தான் ஆடவுள்ளோம். 5ம் வரிசையில் சிறப்பாக ஆடிய ராகுலுக்கு அந்த ஆர்டரில் அவரது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தலாம். ராகுல் 5ம் வரிசையிலேயே இனி இறக்கப்படுவார் என்று கோலி தெரிவித்தார். 

click me!