சாஸ்திரிக்கு அடுத்த இடங்களை பிடித்தது யார்..? அவரோட பெயர் லிஸ்ட்லயே இல்ல

By karthikeyan VFirst Published Aug 17, 2019, 10:48 AM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தவர்கள் யார் யார் என்று பார்ப்போம். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்தன. அதில் டாம் மூடி, மைக் ஹெசன், ஃபில் சிம்மன்ஸ், ராபின் சிங், ரவி சாஸ்திரி உட்பட 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஃபில் சிம்மன்ஸ், இந்த போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து எஞ்சிய 5 பேரிடமும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

பின்னர், மாலை 6.15 மணிக்கு கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய கபில் தேவ், ரவி சாஸ்திரியே இன்னும் 2 ஆண்டுகளுக்கு தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என அறிவித்தார். 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அளவுகோல்களின் அடிப்படையில் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கான முக்கிய காரணம், அவரது கம்யூனிகேஷன் திறன் தான் என்று கபில் தேவ் தெரிவித்தார். மற்றவர்களை விட, சாஸ்திரி விஷயங்களை சிறப்பாக தொகுத்தளித்ததாகவும் அவரது கம்யூனிகேஷன் திறன் தான் அவரை தேர்வு செய்ததற்கான மிக முக்கிய காரணம் என்றும் கபில் தேவ் தெரிவித்தார். 

ஆனால் ரவி சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி ஆகிய மூவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்துள்ளது. ஆனால் ஆலோசனைக்குழுவில் உள்ள கபில் தேவ், கெய்க்வாட், சாந்தா ஆகிய மூவருமே ஒருமனதாக சாஸ்திரியை தேர்வு செய்துள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்ததற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூவருமே சாஸ்திரிக்குத்தான் அதிக மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். 

சாஸ்திரிக்கு அடுத்தபடியாக மைக் ஹெசனும், மூன்றாவது இடத்தில் டாம் மூடியும் இருந்துள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பித்த ராபின் சிங், ராஜ்பூட் ஆகிய மற்ற 2 இந்தியர்களும் டாப் 3ல் இடம்பெறவே இல்லை. 

click me!