உலக கோப்பை 2019: இதுவரை ஆடியதில் யார் சிறந்த கேப்டன்..? இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 13, 2019, 5:11 PM IST
Highlights

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தவிர ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன. இந்த உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பட்லர், வார்னர், பேர்ஸ்டோ, ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என தலைசிறந்த வீரர்கள் மட்டும் ஆடவில்லை. நிறைய நல்ல கேப்டன்களும் உள்ளனர். 

உலக கோப்பை தொடரின் விறுவிறுப்பை மழை குறைத்திருந்தாலும், போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலாகவே உள்ளனர். 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்பவே இரு அணிகளும் அபாரமாக ஆடிவருகின்றன. இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் ஆடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. 3ல் ஆடி மூன்றிலுமே வென்ற நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தவிர ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன. இந்த உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பட்லர், வார்னர், பேர்ஸ்டோ, ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என தலைசிறந்த வீரர்கள் மட்டும் ஆடவில்லை. நிறைய நல்ல கேப்டன்களும் உள்ளனர். 

விராட் கோலி, வில்லியம்சன், இயன் மோர்கன் ஆகியோர் சிறந்த கேப்டன்களாக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் மற்றும் வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா ஆகியோரும் சிறப்பாக அணியை வழிநடத்துகின்றனர். ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஃபின்ச்சும் சிறப்பாக அணியை வழிநடத்துவதுடன் வலுவான அணியாக உருவாக்கியுள்ளார். 

இவ்வாறு பல சிறந்த கேப்டன்கள் உலக கோப்பையில் ஆடிவரும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், ஆரோன் ஃபின்ச் தான் இதுவரை நடந்த போட்டிகளில் சிறந்த கேப்டன் என்று பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாஹன், உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் தான் சிறந்த கேப்டன். உத்தி ரீதியாக ஃபின்ச் தான் சிறந்த கேப்டன்.  வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் சிறப்பாக கேப்டன்சி செய்தார். ஃபின்ச்சின் பவுலிங் சுழற்சியும் கள வியூகமும் சிறப்பாக உள்ளது. எனவே இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் ஃபின்ச் தான் சிறந்த கேப்டன் என்று மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார்.
 

click me!