உங்க டீமுல எதுவுமே செய்யாம ஒரு சீனியர் வீரர் சும்மாவே இருக்காரே..? நறுக் கேள்விக்கு சர்ஃபராஸ் சமாளிப்பு பதில்

By karthikeyan VFirst Published Jun 13, 2019, 4:19 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தோற்றது. 
 

உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை ஆடிய போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு தோல்வியை சந்தித்திருந்தாலும் சிறப்பாகவே ஆடிவருகின்றன. 

ஆஸ்திரேலிய அணி ஆடிய 4 போட்டிகளில் மூன்றிலும் இங்கிலாந்து அணி ஆடிய 3 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தோற்றது. 

ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 308 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியில் மிடில் ஓவர்களில் ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது. 

மிடில் ஆர்டரில் நீண்ட நெடும் அனுபவத்தை கொண்ட சீனியர் வீரர் ஷோயப் மாலிக் ரன்னே எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். பாகிஸ்தான் அணியின் முதல் போட்டியில் இமாத் வாசிம் ஆடினார். அவர் சரியாக ஆடாததால், அதற்கடுத்த போட்டிகளில் சீனியர் வீரர் மாலிக் எடுக்கப்பட்டார். ஆனால் மாலிக் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. 

ஷோயப் மாலிக் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனினும் உலக கோப்பை தொடரில் சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் ஓரளவிற்கு ஆடியிருந்தால் கூட பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாய்ப்பிருந்தது. ஏனெனில் பின்வரிசை வீரர்களான ஹசன் அலி, வஹாப் ரியாஸ் ஆகியோர் சிறப்பாக ஆடினர். மாலிக் கொஞ்சம் ஆடியிருந்தால், கடைசி நேரத்தில் ஹசன் அலி, வஹாப் ரியாஸ் ஆகியோர் போராடி வெற்றியை அடைந்திருப்பார்கள்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவிடம், ஷோயப் மாலிக் பேட்டிங்கும் சரியாக ஆடுவதில்லை; பவுலிங்கும் போடுவதில்லை. எதுவுமே சரியாக செய்யாத அவர் அனைத்து போட்டிகளிலும் அணியில் இருக்கிறாரே என்று நேரடியாக நறுக்குனு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சர்ஃபராஸ், மாலிக் நீண்ட அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர். அவர் இதுவரை சரியாக ஆடவில்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக  ஆடுவார் என்று நம்பிக்கை தெரிவிப்பதுபோல சமாளித்துவிட்டு சென்றார். 
 

click me!