பழைய இந்திய அணியிடம் இல்லாத ஒண்ணு இப்போதைய அணியிடம் இருக்கு - மைக்கேல் ஹோல்டிங்

By karthikeyan VFirst Published Jun 29, 2021, 9:27 PM IST
Highlights

முந்தைய காலக்கட்ட இந்திய அணிகளிடம் இல்லாத ஒரு விஷயம் இப்போதைய அணியிடம் இருப்பது என்னவென்று மைக்கேல் ஹோல்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி  சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஃபார்மட்டுகளிலும் அபாரமாக ஆடி டாப் அணியாக கோலோச்சிவருகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்றாலும், ஆல்டைம் பெஸ்ட் இந்திய அணியாக இதுதான் மதிப்பிடப்படுகிறது.

தற்போதைய இந்திய அணியை முந்தைய அணிகளைவிட சிறப்பித்து காட்டுவது என்ன விஷயம் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னா ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய மைக்கேல் ஹோல்டிங், தற்போதைய இந்திய அணி முற்றிலும் வித்தியாசமானது. நான் ஆடிய காலத்தில் எல்லாம் இந்திய அணியில் ஏதாவது 2 வீரர்கள் ஃபிட்டாக இருப்பார்கள். ஆனால் இப்போதைய இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே ஃபிட்டாக இருக்கிறார்கள். அனைத்து வீரர்களும் தடகள திறன்களுடன் திகழ்கிறார்கள். திறமையில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும், ஃபிட்னெஸில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் ஃபிட்னெஸ் தரம் உயர்த்தப்பட்டது. கோலி கேப்டனான பிறகு ஃபிட்னெஸுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எவ்வளவு திறமையான வீரராக இருந்தாலும், ஃபிட்னெஸ் இல்லையென்றால், அணிக்கு வெளியே தான் இருக்க வேண்டுமே தவிர, அணியில் இடம்பெற முடியாது.
 

click me!