ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார்..? ஒரே மாதத்தில் அந்தர் பல்டி அடித்த முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Mar 4, 2020, 3:16 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணியை வெற்றிகரமான அணியாக ரிக்கி பாண்டிங் நீண்டகாலம் வழிநடத்தினார். அவருக்கு பின்னர் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு 2015ல் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 

மைக்கேல் கிளார்க்கிற்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஸ்மித்தின் கேப்டன்சியில் எல்லாமே நன்கு சென்றுகொண்டிருந்தது. ஆஸ்திரேலிய அணியும் வெற்றிகளை குவித்தன. இந்நிலையில், 2018ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் - வார்னர் தடை பெற்றனர்.

அவர்கள் இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. ஓராண்டு தடை முடிந்து கடந்த ஓராண்டாக அவர்கள் கிரிக்கெட் ஆடிவருகின்றனர். ஸ்மித்திடம் இருந்து கேப்டன்சி பறிபோன பிறகு, ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில், ஸ்மித்தும் வார்னரும் மீண்டும் அணியில் இணைந்ததால் மறுபடியும் வலுவான அணியாக மாறி வெற்றிகளை குவிக்க தொடங்கியது. 

உலக கோப்பையில் வார்னர் அபாரமாக ஆட, ஆஷஸ் தொடரில் ஸ்மித் அசத்தினார். ஸ்மித் தொடர்ச்சியாக மூன்று ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடை முடியவுள்ளது. எனவே டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் அவர் நியமிக்கப்படுவது குறித்த பேச்சுகள் அடிபடுகின்றன. 

ஒருநாள் மற்றும் டி20 அணிகளை ஃபின்ச் வழிநடத்தி கொண்டிருக்கிறார். டெஸ்ட் அணியில் டிம் பெய்ன் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவார். எனவே அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில், ஸ்மித் மறுபடியும் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Also Read - மார்க் பவுச்சர் விதித்த கெடு.. பீதியில் டிவில்லியர்ஸ்

ஏற்கனவே இந்த கருத்தை தெரிவித்திருந்த மைக்கேல் கிளார்க், இப்போது திடீரென, அடுத்த கேப்டனாக பாட் கம்மின்ஸ் தான் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலியாவில் அந்தந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த வீரர் தான் அணியை வழிநடத்த வேண்டும் என்ற ஒரு புரிந்துணர்வு இருக்கிறது. ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு சிறந்த கேப்டன் தான் அணியின் கேப்டனாக இருக்க வேண்டுமே தவிர, சிறந்த வீரர் அல்ல. பாட் கம்மின்ஸ் ஃபிட்டாக இருக்கிறார். அனைத்து ஃபார்மட்டுகளிலும் சிறப்பாக ஆடுகிறார். எனவே அவரை அடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்று கிளார்க் தெரிவித்துள்ளார். 
 

click me!