மார்க் பவுச்சர் விதித்த கெடு.. பீதியில் டிவில்லியர்ஸ்

By karthikeyan VFirst Published Mar 4, 2020, 1:35 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் மீண்டும் இணைய அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கெடு விதித்துள்ளார். 
 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஏபி டிவில்லியர்ஸ், உலக கோப்பைக்கு ஓராண்டுக்கு முன்பாக 2018ம் ஆண்டின் மத்தியில் திடீரென ஓய்வு அறிவித்தார். 

டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவருக்குமே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு அறிவித்ததாக தெரிவித்த டிவில்லியர்ஸ், ஐபிஎல் உட்பட பல்வேறு வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

அண்மையில் கூட பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடினார். இதற்கிடையில், உலக கோப்பையில் மரண அடி வாங்கி லீக் சுற்றுடன் வெளியேறிய தென்னாப்பிரிக்க அணி, அதன்பின்னர் இந்தியாவிற்கு வந்து இந்திய அணியிடம் தோல்விகளை சந்தித்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும் விதமாக குயிண்டன் டி காக் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக ஆடியது. 

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கு மிகச்சிறந்த அணியுடன் செல்ல வேண்டும் என்பதில் தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உறுதியாக இருக்கிறார். எனவே அதற்காக டிவில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ள தயாராகவும் இருக்கிறார். இதுதொடர்பாக டிவில்லியர்ஸிடம் பேசியிருப்பதாகவும் அணி நிர்வாகம் அழைக்கும்போது வருவாரேயானால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என பவுச்சர் தெரிவித்திருந்தார். 

Also Read - ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த தோனி கூட இப்படி ஒரு ஹெலிகாப்டரை பறக்கவிட்டது இல்ல.. ரஷீத்தின் வேற லெவல் வீடியோ

இந்நிலையில், டிவில்லியர்ஸுக்கு கெடு விதித்துள்ளார் மார்க் பவுச்சர். இதுகுறித்து பேசிய மார்க் பவுச்சர், ஐபிஎல் மிகப்பெரிய தொடர். தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுகிறார்கள். டி20 உலக கோப்பைக்கு முன் சில போட்டிகள் இருக்கின்றன. ஐபிஎல் முடிந்ததும் அடுத்ததாக நடக்கவுள்ள இலங்கை தொடருக்கு வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியில் இணைய வேண்டும். நாங்கள் அவர்களை(டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன் போன்றோர்) அணியில் எடுக்கிறோமா இல்லையா என்பது அடுத்த விஷயம். ஆனால் உலக கோப்பையில் ஆட விரும்பினால் அணியில் இணைய வேண்டும் என்று மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். 
 

click me!