BBL: மார்கஸ் ஸ்டோய்னிஸ் காட்டடி பேட்டிங்.. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி மெல்பர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Dec 31, 2022, 5:05 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்ன் ஸ்டார்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ஸ்டார்ஸ்:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், பியூ வெப்ஸ்டெர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹில்டன் கார்ட்ரைட், நிக் லார்கின், காம்ப்பெல் கெல்லாவே, லுக் உட், டிரெண்ட் போல்ட், லியாம் ஹாட்ச்சர், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்:

மேத்யூ ஷார்ட், ஹென்ரி ஹண்ட், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், வெஸ் அகார், ஹென்ரி தார்ண்டான், பீட்டர் சிடில் (கேப்டன்).

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் 32 பந்தில் 42 ரன்கள் அடித்தார். தாமஸ் ரோஜர்ஸ் 30 ரன்கள் அடித்தார். அதிரடியாக பேட்டிங் ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அரைசதம் அடித்தார். 18வது ஓவரில் ஸ்டோய்னிஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசி, 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.

187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹென்ரி ஹண்ட் 49 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஆடம் ஹோஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரஷீத் கான் கடைசியில் 14 பந்தி ல் 24 ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடியபோதிலும், 20 ஓவரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 178 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளம்.. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சௌதி அரேபிய கிளப் அணி

8 ரன் வித்தியாசத்தில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.

click me!