அல்டிமேட் ஃபார்மில் எதிரணிகளை அடித்து துவம்சம் செய்யும் மேத்யூ வேட்.. அதிரடி சதம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 26, 2020, 3:27 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக ஆடி சதமடித்ததுடன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 130 ரன்களை குவித்து அசத்தினார். 
 

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, மேத்யூ வேடின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 217 ரன்களை குவித்தது. 

தொடக்க வீரர்கள் மேத்யூ வேடும் டார்ஷி ஷார்ட்டும் இணைந்து அபாரமாக ஆடினர். அல்டிமேட் ஃபார்மில் அனைத்து போட்டிகளிலும் அசத்தலாக ஆடிவரும் மேத்யூ வேட், இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அதிரடியாக ஆடினார் மேத்யூ வேட். வேட் அதிரடியாக ஆடியதால் அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுக்கும் பணியை மட்டுமே செய்தார் டார்ஷி ஷார்ட்.

அதிரடியாக ஆடிய வேட், அரைசதம் அடித்தார். அதன்பின்னர் வேற லெவலில் அடித்து ஆடி சதமடித்தார். மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ஷார்ட்டும் டெத் ஓவர்களில் சிக்ஸர்களை விளாசினார். 17வது ஓவரில் வேட், 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க, அடுத்த ஓவரில் ஷார்ட் 2 சிக்ஸர்கள் அடித்தார். 55 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் அடித்து ஷார்ட் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 130 ரன்களை குவித்தார். 

Just helped on it's way for an 88m six 😎

Two wides means Billy Stanlake has gone for 0-8 from one legal delivery pic.twitter.com/Q5D26pF2sP

— KFC Big Bash League (@BBL)

Give us more one-handed Wade plz !!

Fiddy up for Wade and the 'Canes are flying pic.twitter.com/88TinrXa4n

— KFC Big Bash League (@BBL)

Put this in the crowd catch Hall of Fame! 😂 pic.twitter.com/aUfqQPxcQ0

— KFC Big Bash League (@BBL)

D'Arcy Short wants a piece of this action! pic.twitter.com/1meE7zjQHd

— KFC Big Bash League (@BBL)

Also Read - உச்சகட்ட பரபரப்பு.. கடைசி வரை தனி ஒருவனாக போராடிய இஷான் கிஷான்.. ஒருநாள் போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் முடிவு

மேத்யூ வேட் மற்றும் டார்ஷி ஷார்ட்டின் அதிரடியால், 20 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, 217 ரன்களை குவித்தது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி. 218 ரன்கள் என்ற கடின இலக்குடன் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆடிவருகிறது. 
 

click me!