டேவிட் வார்னர் கொடுத்த கடினமான கேட்சை பதிரனா பறந்து சென்று கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாட தொடங்கினர். டேவிட் வார்னர், 32 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 62ஆவது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 9 ஓவர்கள் முடிவில் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முஷ்தாபிஜூர் ரஹ்மானின் 9.3 ஆவது ஓவரின் போது டேவிட் வார்னர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தார். அப்போது லெக் ஸ்லிப் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த மதீஷா பதிரனா ஒரு கையால் பறந்து சென்று கேட்ச் பிடித்தார். இதற்கு தோனி கை தட்டி பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்போது வார்னர் 35 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது வரையில் டெல்லி கேபிடல்ஸ் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
CATCH OF IPL 2024...!!!!
PATHIRANA, TAKE A BOW. 🔥🤯pic.twitter.com/2WzN2g0JS1