சாய் சுதர்சன், டேவிட் மில்லர் அதிரடி – சிம்பிளா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்த ஜிடி!

By Rsiva kumar  |  First Published Mar 31, 2024, 7:57 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 12ஆவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 ரன்களும், அப்துல் சமாத் 29 ரன்களும் எடுத்தனர். ஹென்ரிச் கிளாசென் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், விருத்திமான் சகா 25 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். சுப்மன் கில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக டேவிட் மில்லர் மற்றும் விஜய் சங்கர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். மில்லர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் டைட்டன்ஸ் அணி 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரையில் நடந்த 12 போட்டிகளில் 11 போட்டியில் ஹோம் மைதானத்தில் நடந்த போட்டியில் ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், ஒரு போட்டியில் மட்டுமே அவே அணி வெற்றி பெற்றிருக்கிறது. பெங்களூருவில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் கேகேஆர் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!