பிரித்வி ஷாவை களமிறக்கும் டெல்லி, டாஸ் வென்று பேட்டிங்! ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே?

Published : Mar 31, 2024, 07:19 PM IST
பிரித்வி ஷாவை களமிறக்கும் டெல்லி, டாஸ் வென்று பேட்டிங்! ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே?

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 13 ஆவது லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ப்ரித்வி ஷா மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. மேலும் ரிக்கி பூய் நீக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ்:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மாஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், அபிஷேக் போரெல், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரகானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா, முஷ்தாபிஜூர்  ரஹ்மான்.

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 29 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 19 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 10 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக சிஎஸ்கே 223 ரன்கள் எடுத்துள்ளது. sஇதே போன்று குறைந்தபட்சமாக 110 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அதிகபட்சமாக 198 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 83 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியாக நடந்த 3 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி