ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் பத்திரனாவை களமிறக்கும் இலங்கை!

By Rsiva kumarFirst Published May 31, 2023, 5:51 PM IST
Highlights

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்த பொன்னான வாய்ப்பு மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியில் பத்திரனா களமிறக்கப்படுகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற மதீஷா பத்திரனா சென்னை அணியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார். இவரது பந்துவீச்சைப் பார்த்த தோனி, பத்திரனாவிற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறினார். பத்திரனாவின் குடும்பத்தைச் சந்தித்த தோனி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று கூறியிருந்தார்.

தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பு!

இவ்வளவு ஏன், இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே கடைசி பந்தில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனானது.

சிஎஸ்கே சாம்பியனானது எப்படி? சிஎஸ்கேயின் வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன?

இந்த நிலையில், இலங்கை செல்லும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக மதீஷா பதிரனா இலங்கை அணியில் அறிமுகமாகிறார். வரும் ஜூன் 2 ஆம் தேதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நடக்கிறது. 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் 2 ஆவது மற்றும் 3 ஆவது ஒரு நாள் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெட்லிஃப்டிங்கில் 60 கிலோவை அசால்ட்டா தூக்கி அனைவரது கவனம் ஈர்த்த 8 வயது சிறுமி அர்ஷியா கோஸ்வாமி!

click me!