Australia vs England: பகலிரவு டெஸ்ட்டில் பயங்கரமான சாதனை படைத்த லபுஷேன்..! ரூட்டின் சாதனையையும் சமன் செய்தார்

Published : Dec 17, 2021, 06:12 PM IST
Australia vs England: பகலிரவு டெஸ்ட்டில் பயங்கரமான சாதனை படைத்த லபுஷேன்..! ரூட்டின் சாதனையையும் சமன் செய்தார்

சுருக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன்.  

2018ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தலையில் அடிபட்டபோது, அவருக்கு கன்கஷன் மாற்றாக அணியில் இடம்பிடித்த வீரர் மார்னஸ் லபுஷேன். கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட லபுஷேன், ஸ்மித் அணியில் இணைந்தபின்னரும், ஆஸ்திரேலிய அணியில் தனக்கான இடத்தை பிடித்து அபாரமாக ஆடிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவரும் 2வது டெஸ்ட்டில், டேவிட் வார்னர் (95) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (93) ஆகிய இருவரும் சதத்தை தவறவிட்ட நிலையில், சதமடித்த ஒரே வீரர் மார்னஸ் லபுஷேன் தான். அபாரமாக ஆடி சதமடித்த லபுஷேன் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இது லபுஷேனின் 6வது டெஸ்ட் சதம். லபுஷேன் ஆடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது தான் என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட்டுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் லபுஷேன்.

ஜோ ரூட் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதே 6 சதமடித்துள்ள லபுஷேன், ஜோ ரூட்டுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் லபுஷேன் 4 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் பகலிரவு டெஸ்ட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லபுஷேன் படைத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!
SMAT 2025: ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்.. கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்!