உலக கோப்பையின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் யார்..? ஆஸி., முன்னாள் ஜாம்பவான் அதிரடி

Published : May 25, 2019, 02:41 PM IST
உலக கோப்பையின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் யார்..? ஆஸி., முன்னாள் ஜாம்பவான் அதிரடி

சுருக்கம்

விராட் கோலி, ரோஹித் சர்மா, வில்லியம்சன், வார்னர், ஸ்மித், ஜோ ரூட், பேர்ஸ்டோ, பட்லர் என பல சிறந்த வீரர்கள் இந்த உலக கோப்பையில் ஆடுகின்றனர். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

உலக கோப்பை தொடர் நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கக்கூட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இது ஒரு ஹை ஸ்கோரிங் தொடராக அமையப்போகிறது என்பது மட்டும் உறுதி.

விராட் கோலி, ரோஹித் சர்மா, வில்லியம்சன், வார்னர், ஸ்மித், ஜோ ரூட், பேர்ஸ்டோ, பட்லர் என பல சிறந்த வீரர்கள் இந்த உலக கோப்பையில் ஆடுகின்றனர். ஒரே தொடரில் உலகின் பல சிறந்த வீரர்கள் ஆடும் நிலையில், இங்கிலாந்து ஆடுகளங்களும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. 

இந்நிலையில் இந்த தொடரில் டாப் 3 ஸ்கோர் அடிக்கும் வீரர்களாக யார் யார் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலி தான் நம்பர் 1. இங்கிலாந்தி ஜோஸ் பட்லர் நம்பர் 2 மற்றும் டேவிட் வார்னர் நம்பர் 3 என மார்க் வாக் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!