நமக்காவது பரவாயில்ல.. இங்கிலாந்து அணியில் கேப்டனுக்கே ஆப்பு..?

By karthikeyan VFirst Published May 25, 2019, 1:31 PM IST
Highlights

இந்திய அணியின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான தவான் பயிற்சியின்போது பவுன்ஸரில் அடிவாங்கினார். அவரது காயம் குறித்து அப்டேட்டும் இல்லை. ஆனால் தவானுக்கு சிறியளவிலான காயம் என்பதாக தெரிகிறது. 
 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளன. உலக கோப்பை தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன.

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு அணிகளுக்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிதான் கிடைத்துள்ளது. வலைப்பயிற்சியின் போது இந்திய வீரர் விஜய் சங்கருக்கு கையில் அடிபட்டுள்ளது. அதனால் அவர் பயிற்சி போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை. ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்குள் அவர் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதியை பெற்றுவிடுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

அதேபோல இந்திய அணியின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான தவான் பயிற்சியின்போது பவுன்ஸரில் அடிவாங்கினார். அவரது காயம் குறித்து அப்டேட்டும் இல்லை. ஆனால் தவானுக்கு சிறியளவிலான காயம் என்பதாக தெரிகிறது. 

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டாம் லதாமும் காயத்தால் அவதிப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியை சிறந்த அணியாக உருவாக்கி, உலக கோப்பையை வெல்ல தகுதியும் வாய்ப்பும் உள்ள அணியாக உருவாக்கிய கேப்டன் இயன் மோர்கனுக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இயன் மோர்கனுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறியளவிலான காயம் தான் என்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் மோர்கன் ஆடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் பயிற்சி போட்டிகளில் மோர்கன் ஆட வாய்ப்பில்லை. 
 

click me!