பேட்ஸ்மேன் பிட்ச்சில் எங்கு வேணாலும் நிற்கலாம்..! பவுலர் தான் அவரை அவுட்டாக்கணும்.. முன்னாள் வீரர் கொந்தளிப்பு

By karthikeyan VFirst Published Aug 28, 2021, 9:07 PM IST
Highlights

ரிஷப் பண்ட்டை க்ரீஸை விட்டு வெளியே நின்று பேட்டிங் ஆடக்கூடாது என கள நடுவர்கள் அறிவுறுத்தியதற்கு எதிராக மனீந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஆடுகளத்தில் ஓட தடை செய்யப்பட்ட நடு பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் ஓடக்கூடாது. அப்படி ஒருவேளை ஓடினால் அம்பயர்கள் எச்சரிப்பார்கள். ஆனால் அதேவேளையில், பேட்ஸ்மேன்கள் க்ரீஸில் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். க்ரீஸை விட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வெளியே நிற்கலாம்.

க்ரீஸை விட்டு வெளியே நின்றால் அம்பயர்கள் பேட்ஸ்மேன்களை எதுவும் சொல்லக்கூடாது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்விங்கை தடுப்பதற்காக க்ரீஸை விட்டு வெளியே நின்றார். 

ஆனால் கள நடுவர், பிட்ச்சில் கால்தடத்தை பதிக்கும் நோக்கில் ரிஷப் பண்ட் க்ரீஸை விட்டு வெளியே நிற்பதாக கருதி, அவரை க்ரீஸுக்குள் நின்று ஆடுமாறு அறிவுறுத்தினர். இந்த தகவலை பின்னர் ரிஷப் பண்ட் தெரிவித்தார்.

அம்பயர் ரிஷப் பண்ட்டை க்ரீஸுக்குள் நின்று ஆட அறிவுறுத்த வேண்டியதில்லை. பேட்ஸ்மேன் பிட்ச்சில் எங்கு வேண்டுமானாலும் நின்று பேட்டிங் ஆடலாம்; அது பேட்ஸ்மேனின் விருப்பம் என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

அதே கருத்தை முன்னாள் வீரர் மனீந்தர் சிங்கும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மனீந்தர் சிங், அம்பயர் செய்தது தவறு. பேட்ஸ்மேன் எங்கு வேண்டுமானாலும் நின்று பேட்டிங் ஆடலாம். அது பேட்ஸ்மேனின் விருப்பம். பவுலர் தான் பேட்ஸ்மேனை அவுட்டாக்க வேண்டும். பேட்ஸ்மேன் நிற்க விரும்பும் இடத்திலிருந்து மாறி நிற்குமாறு அறிவுறுத்த முடியாது என்று மனீந்தர் சிங் தெரிவித்தார்.
 

click me!