#ICCWTC புள்ளி பட்டியல்.. 3ம் இடத்தில் இந்தியா, முதல் இடத்தில் பாகிஸ்தான்..!

Published : Aug 28, 2021, 07:27 PM IST
#ICCWTC புள்ளி பட்டியல்.. 3ம் இடத்தில் இந்தியா, முதல் இடத்தில் பாகிஸ்தான்..!

சுருக்கம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டிக்கு பின், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை பார்ப்போம்.  

முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி வென்றது. அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தான் முதல் டெஸ்ட் தொடர். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்த நிலையில், இரு அணிகளின் வெற்றி விகிதமும் 50% தான். ஆனால் வெளிநாட்டில்(வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது பாகிஸ்தான்) ஆடியதன் அடிப்படையில், பாகிஸ்தான் முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 2ம் இடத்திலும் உள்ளன.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுமே தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவை பெற்றுள்ளன.

எனவே 38.88 வெற்றி விகிதத்துடன் இந்திய அணி 3ம் இடத்திலும், அதே வெற்றி விகிதத்துடன் இங்கிலாந்து அணி 4ம் இடத்திலும் உள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
ICC Rankings: ஐசிசி தரவரிசையில் மாஸ் காட்டிய கில்... பும்ராவின் No.1 இடத்துக்கு வந்த நியூசி. வீரர்!