வாசிம் அக்ரமை சமன் செய்த மலிங்கா.. உலக கோப்பை வரலாற்றில் தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Jul 2, 2019, 1:16 PM IST
Highlights

உலக கோப்பையில் இலங்கை அணியின் ஃபாஸ்ட் பவுலர் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். 
 

உலக கோப்பையில் இலங்கை அணியின் ஃபாஸ்ட் பவுலர் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று முடிவடையவுள்ளது. இலங்கை அணி இனிமேல் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை. 

இந்த உலக கோப்பையில் இழப்பதற்கோ பெறுவதற்கோ எதுவுமில்லாத இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்களை குவித்தது. 339 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை 315 ரன்களுக்கு சுருட்டி 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. 

இந்த போட்டியிலும் மலிங்கா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த உலக கோப்பையில் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மலிங்கா, உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் வாசிம் அக்ரமை சமன் செய்துள்ளார். 

2007 உலக கோப்பையிலிருந்து ஆடிவரும் மலிங்காவிற்கு இது நான்காவது உலக கோப்பை தொடர். நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 55 விக்கெட்டுகளை உலக கோப்பைகளை வீழ்த்திய மலிங்கா, வாசிம் அக்ரமின்(55 விக்கெட்டுகள்) சாதனையை சமன் செய்துள்ளார். 

இந்த பட்டியலில் 71 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் முதலிடத்திலும் 68 விக்கெட்டுகளுடன் இலங்கையின் முத்தையா முரளிதரன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தை மலிங்கா பிடித்துள்ளார். 

click me!