சும்மா கிரிக்கெட் ஆடுனா மட்டும் இங்கே தாக்குப்பிடிக்க முடியாது.. இளம் பவுலர்களுக்கு மலிங்காவின் அறிவுரை

By karthikeyan VFirst Published Jul 28, 2019, 4:20 PM IST
Highlights

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் மலிங்கா, இளம் வீரர்களுக்கு பயனுள்ள ஒரு முக்கியமான அறிவுரையை கூறிச்சென்றுள்ளார். 
 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் மலிங்கா, இளம் வீரர்களுக்கு பயனுள்ள ஒரு முக்கியமான அறிவுரையை கூறிச்சென்றுள்ளார். 

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பில் கடந்த 26ம் தேதி நடந்தது. அந்த போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. அந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, அந்த போட்டியுடன் ஓய்வு பெற்றார். 

இலங்கை அணியில் 2004ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் மலிங்கா, 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 338 விக்கெட்டுகளையும் 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 101 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியிலும் சரி, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சரி, மேட்ச் வின்னராக திகழ்ந்துள்ளார் மலிங்கா. அதனால்தான் 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த அவரை, மீண்டும் 2019 சீசனுக்கு அணியில் இணைத்தது மும்பை இந்தியன்ஸ். அதேபோலவே தொடர் முழுவதும் அபாரமாக வீசியதோடு இறுதி போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த மலிங்கா, இளம் வீரர்களுக்கு முக்கியமான ஒரு அறிவுரையை கூறிச்சென்றார். எனது கேப்டன்கள் எல்லாருமே நான் விக்கெட்டை வீழ்த்தி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். நானும் எனது கெரியர் முழுவதுமே அதற்கான முழு முயற்சிகளை செய்தேன். இளம் பவுலர்களும் அதையே செய்வார்கள் என நம்புகிறேன். சும்மா கிரிக்கெட் ஆடுவது முக்கியமல்ல. அப்படி ஆடினால் நீண்டதூரம் பயணிக்க முடியாது. அதனால் மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்று மலிங்கா அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!