IND vs NZ விராட் கோலி கம்பேக்.. இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் சீனியர் வீரர்..?

Published : Nov 30, 2021, 09:48 PM IST
IND vs NZ விராட் கோலி கம்பேக்.. இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் சீனியர் வீரர்..?

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆடுவதால் எந்த வீரர் நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்து கூறியுள்ளார்.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடந்தது. அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கான்பூர் டெஸ்ட்டில் விராட் கோலி ஆடாததால் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய  அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அறிமுக டெஸ்ட்டிலேயே முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து, அறிமுக டெஸ்ட்டில் சதமும், அரைசதமும் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டில் சதமும், அரைசதமும் அடித்தது கூட பெரிய விஷயமில்லை. ஆனால் அவர் அடித்த சூழல் தான் முக்கியமானது. இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலுமே இக்கட்டான நிலையில் இருந்தபோது சதமும், அரைசதமும் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஷ்ரேயாஸ் ஐயர் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடினார். இந்நிலையில், மும்பையில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவதால், இந்திய அணியில் யார் நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. சிறப்பாக ஆடி அணியை இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றிய ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவாரா அல்லது ஃபார்மில் இல்லாமல் அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவரும் புஜாரா - ரஹானே ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவாரா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் மதன் லால், ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் மதிப்புமிக்க ரன்களை அடித்துள்ளார். புஜாராவும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை என்றாலும், க்ரீஸில் நீண்ட நேரம் நின்று ஆடியிருக்கிறார். ஆனால் ரஹானே தான் சொதப்புகிறார். எனவே விராட் கோலி அணியில் இணைவதால் ஒரு வீரர் நீக்கப்பட வேண்டுமென்றால், அது ரஹானே தான் என்று மதன் லால் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
ICC Rankings: ஐசிசி தரவரிசையில் மாஸ் காட்டிய கில்... பும்ராவின் No.1 இடத்துக்கு வந்த நியூசி. வீரர்!