IPL 2022 Retention: ஐபிஎல் அணிகளால் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்கள்..!

Published : Nov 30, 2021, 08:34 PM IST
IPL 2022 Retention: ஐபிஎல் அணிகளால் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்கள்..!

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். அந்தவகையில், இன்றுதான் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

ஐபிஎல் அணிகள் சில பெரிய வீரர்களை விடுவித்துள்ளன. அந்தவகையில், ஐபிஎல் அணிகள் விடுவித்துவிட்ட பெரிய  வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

2018லிருந்து கேப்டனாக இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியதுடன், மிகச்சிறப்பாக ஆடி ஏகப்பட்ட ரன்களை குவித்ததுடன், தற்போது செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் கேஎல் ராகுலை பஞ்சாப் கிங்ஸ் அணி கழட்டிவிட்டுள்ளது. அதேபோல டெல்லி கேபிடள்ஸின் கேப்டனாக இருந்துவந்த ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது.

அதேபோல, 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. அந்த அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவந்த ரஷீத் கானையும் சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிட்டுள்ளது.

இவர்கள் தவிர, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், பென் ஸ்டோக்ஸ், முகமது ஷமி, ஜானி பேர்ஸ்டோ, ஸ்டீவ் ஸ்மித், ககிசோ ரபாடா ஆகிய பெரிய வீரர்கள் அந்தந்த அணிகளால் கழட்டிவிடப்பட்டுள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!