IPL 2023: GT vs LSG டாஸ் ரிப்போர்ட்..! ராகுல் ஆடாததால் லக்னோ அணி காம்பினேஷனில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan V  |  First Published May 7, 2023, 3:44 PM IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வலுவான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் அபாரமாக ஆடி புள்ளி பட்டியலில் முதலில் இருக்கும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் 11 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கேப்டன் க்ருணல் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயத்தால் இந்த சீசனிலிருந்து விலகியதால் க்ருணல் பாண்டியா கேப்டன்சி செய்கிறார்.

Latest Videos

கேஎல் ராகுல் ஆடாததால் ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குயிண்டன் டி காக் அணியில் இடம்பிடித்து விக்கெட் கீப்பராக ஆடுகிறார். நிகோலஸ் பூரன் அணியில் இடம்பெறவில்லை. மோசின் கான், கரன் ஷர்மா, ஸ்வப்னில் சிங் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, கரன் ஷர்மா, க்ருணல் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்வப்னில் சிங், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், மோசின் கான், ஆவேஷ் கான். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.
 

click me!