DC vs LSG: டாஸ் ரிப்போர்ட்.. தொலைநோக்கு பார்வையுடன் சாமர்த்தியமாக ஒரு மாற்றம் செய்த லக்னோ அணி

Published : May 01, 2022, 03:16 PM IST
DC vs LSG: டாஸ் ரிப்போர்ட்.. தொலைநோக்கு பார்வையுடன் சாமர்த்தியமாக ஒரு மாற்றம் செய்த லக்னோ அணி

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடிவரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடேவில் போட்டி தொடங்குகிறது. அதற்கான டாஸ் 3 மணிக்கு போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. பிளே ஆஃபிற்கும் அதன்பின்னர் ஃபைனலுக்கும் முன்னேறிவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள அந்த அணி, அதற்காக ஆவேஷ் கானை பாதுகாத்து வைக்கும் நோக்கில் அவரை தொடர்ச்சியாக ஆடவைக்க விரும்பவில்லை. எனவே ஆவேஷ் கானுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கிருஷ்ணப்பா கௌதம் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த அணி கடந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேனை (மனீஷ் பாண்டே) குறைத்துவிட்டு, ஒரு ஃபாஸ்ட் பவுலரை(ஆவேஷ் கான்) கூடுதலாக ஆடவைத்தது. இந்த போட்டியில் ஆவேஷ் கானை நீக்கிவிட்டு ஸ்பின் ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கௌதமை சேர்த்துள்ளது. அந்த அணி வித்தியாசமானமுடிவுகளை எடுத்தாலும், அது போட்டியின் முடிவை பாதிக்காமல் நேர்மறையான முடிவுகளை கொடுப்பதால், அந்த அணி சில பரிசோதனை மாற்றங்களை செய்துவருகிறது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, மோசின் கான், ரவி பிஷ்னோய்.

டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் கள்மைறங்கியுள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?