MI vs LSG: கேஎல் ராகுல் அதிரடி சதம்.. மும்பை இந்தியன்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

Published : Apr 16, 2022, 05:30 PM IST
MI vs LSG: கேஎல் ராகுல் அதிரடி சதம்.. மும்பை இந்தியன்ஸுக்கு கடின  இலக்கை நிர்ணயித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 199 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 200 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கைரன் பொல்லார்டு, ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனாத்கத், முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, டைமல் மில்ஸ்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக்  24 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய மனீஷ் பாண்டே அடித்து ஆடி 29 பந்தில் 38 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் ஆடினார் கேப்டன் ராகுல். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அடித்து ஆடிய கேஎல் ராகுல் ஐபிஎல்லில் 3வது சதத்தை பதிவு செய்தார். 2வது முறையாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சதம் விளாசினார் கேஎல் ராகுல். தீபக் ஹூடா 8 பந்தில் 15 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரை அருமையாக வீசிய ஜெய்தேவ் உனாத்கத், அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கேஎல் ராகுல் 60 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார். 20 ஓவரில் 199 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 200 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!