DC vs RCB: டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ்.. இடத்தை இழக்கும் வீரர் அவர் தான்..! ஆர்சிபி அணியிலும் ஒரு மாற்றம்

Published : Apr 16, 2022, 05:06 PM IST
DC vs RCB: டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ்.. இடத்தை இழக்கும் வீரர் அவர் தான்..! ஆர்சிபி அணியிலும் ஒரு மாற்றம்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனில் இன்று இரவு மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளுமே இந்த சீசனில் நன்றாக ஆடி வெற்றி பெற்றுவருகின்றன.

இந்த சீசனில் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் தான் இரு அணிகளுமே களமிறங்குகின்றன. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடுவதால் சர்ஃபராஸ் கான் நீக்கப்படுவார். மிட்செல் மார்ஷின் வருகை கண்டிப்பாக டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் வலுசேர்க்கும்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.

ஆர்சிபி அணியில் கடந்த போட்டியில் ஆடாத ஹர்ஷல் படேல் இன்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கை இறப்புக்கு சென்றுவிட்டதால் கடந்த போட்டியில் ஆடாத ஹர்ஷல் படேல், இன்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என்பதால் ஆகாஷ் தீப் நீக்கப்படுவார்.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, ஷபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ்  பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Rankings: 230 இடங்கள் எகிறிய வைபவ்... இளம் புயல் சூர்யவன்ஷியின் லேட்டஸ்ட் ரேங்க் என்ன?
IND vs SL Test: 33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்! யார் இந்த சரன்ஷ் ஜெயின்? பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்?