ஆர்சிபிக்கு ஆட்டம் காட்டிய குயீண்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் – 181 ரன்கள் குவித்த லக்னோ!

By Rsiva kumarFirst Published Apr 2, 2024, 9:32 PM IST
Highlights

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியில் குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குயீண்டன் டி காக் அதிரடியாக விளையாடினார். ராகுல் சற்று நிதானமாக தொடங்கினாலும், கிளென் மேக்ஸ்வெல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்திலேயே 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னில் 24 ரன்களில் நடையை கட்டினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய குயீண்டன் டி காக் 36 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 22ஆவது அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் வந்த நிக்கோலஸ் பூரன் காட்டு காட்டுன்ன காட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. பூரன் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), மாயங்க் டாகர், ரீஸ் டாப்ளே, முகமது சிராஜ், யாஷ் தயாள்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹாக், மாயங்க் யாதவ்.

click me!