மீண்டும் கேப்டனாக வந்த கேஎல் ராகுல் – டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு!

By Rsiva kumar  |  First Published Apr 2, 2024, 7:37 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.


கடந்த 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் 14 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், 12 போட்டிகளில் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் அவே அணியே வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதே போன்று நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தான் இன்று பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் அல்ஜாரி ஜோஃசப்பிற்கு பதிலாக ரீஸ் டாப்ளே அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் திரும்ப வந்துள்ளார். கடந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), மாயங்க் டாகர், ரீஸ் டாப்ளே, முகமது சிராஜ், யாஷ் தயாள்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹாக், மாயங்க் யாதவ்.

ஆர்சிபி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 போட்டிகளிலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாகவும், குறைந்தபட்சமாகவும் பெங்களூரு அணி 212 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று லக்னோ அதிகபட்சமாக 213 ரன்களும், குறைந்தபட்சமாக 108 ரன்களும் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் லக்னோ அணியும், ஒரு போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் பெங்களூருவில் நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!