LSG vs CSK: டி காக், லூயிஸ் அதிரடி அரைசதம்.. CSK நிர்ணயித்த கடின இலக்கை அசால்ட்டா அடித்து LSG அபார வெற்றி

Published : Apr 01, 2022, 05:34 AM IST
LSG vs CSK: டி காக், லூயிஸ் அதிரடி அரைசதம்.. CSK நிர்ணயித்த கடின இலக்கை அசால்ட்டா அடித்து LSG அபார வெற்றி

சுருக்கம்

சிஎஸ்கே அணி நிர்ணயித்த 211 ரன்கள் என்ற கடின இலக்கை கடைசி ஓவரின் 3வது பந்தில் அடித்து லக்னோ அணி 6 லவிக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும்  மோதின. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

 

சிஎஸ்கே அணி 3 மாற்றங்களுடனும், லக்னோ அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கியது.

 

சிஎஸ்கே அணி:

 

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, ட்வைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே.

 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

 

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, துஷ்மந்தா சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான். 

 

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான சீனியர் வீரர் ராபின் உத்தப்பா, விண்டேஜ் உத்தப்பாவாக மாறி அடி வெளுத்துவாங்கினார். உத்தப்பா அடித்து ஆடி 27 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி 22 பந்தில் 35 ரன்கள் அடித்தார். ஷிவம் துபே அதிரடியாக பேட்டிங் ஆடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். 30 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.

 

ஷிவம் துபே ஆட்டமிழந்த பிறகு 19வது ஓவரின் 3வது பந்தில் களத்திற்கு வந்த தோனி, முதல் பந்தே சிக்ஸர் அடித்தார். அடுத்ததாக ஒரு பவுண்டரி அடித்த தோனி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து முடித்தார். 6 பந்தில் தோனி 16 ரன்கள் அடித்தார்.

 20 ஓவரில் 210 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு நிர்ணயித்தது.

 

211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் டி காக் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து ஙொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 99 ரன்களை குவித்தனர். 26 பந்தில் 40 ரன்கள் அடித்து ராகுல் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த டி காக், 61 ரன்னில் ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டே வெறும் 5 ரன்னுக்கு வெளியேறினார்.

 

அதன்பின்னர் அதிரடியாக அடித்து ஆடிய எவின் லூயிஸ் 23 பந்தில் 55 ரன்கள் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். ஆயுஷ் பதோனி அவர் பங்கிற்கு 9 பந்தில் 19 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரின் 3வது பந்தில் 211 ரன்கள் என்ற கடின இலக்கை எட்டி லக்னோ அணி வெற்றி பெற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜூனியர் சச்சின் ரெடி.. வைபவ் சூர்யவன்ஷியை உடனே இந்திய டீம்ல சேருங்க.. வலுக்கும் கோரிக்கை!
ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்