ஒண்ணோ ரெண்டோ இல்ல.. தாறுமாறான மாற்றங்களுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி

By karthikeyan VFirst Published Oct 19, 2019, 10:21 AM IST
Highlights

கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சரமாரியான மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றுவிட்டது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. 

தொடர்ச்சியாக டாஸ் தோற்றதால் விரக்தியடைந்த தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ், இந்த போட்டியில் டெம்பா பவுமாவை டாஸ் போட அனுப்பிவைத்தார். ஆனால் அவரும் டாஸ் தோற்றார். இந்தியாவில் ஆடும்போது டாஸ் ரொம்ப முக்கியம். ஏனெனில் முதலில் பேட்டிங் ஆடி மெகா ஸ்கோரை அடித்துவிட்டால் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். ஆனால் ஒரு போட்டியில் கூட தென்னாப்பிரிக்க அணியால் டாஸ் ஜெயிக்க முடியாமல் போனது. 

ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால் இஷாந்த் சர்மாவிற்கு பிரேக் கொடுத்துவிட்டு, கூடுதலாக ஒரு ஸ்பின்னர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 வயதான இடது கை ஸ்பின் பவுலர் ஷேபாஸ் நதீம் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார். 

இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களம் கண்டுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி, அதிரடியான பல மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. தொடக்க வீரர் மார்க்ரம் மற்றும் ஸ்பின் பவுலர் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரும் காயத்தால் இந்த போட்டியிலிருந்து விலகிவிட்டனர். 

கேசவ் மஹாராஜுக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க்ரம் இல்லாததால் டி காக் தொடக்க வீரராக இறங்கவுள்ளார். இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக ஹென்ரிச் க்ளாசன் சேர்க்கப்பட்டுள்ளார். 

முதல் இரண்டு போட்டிகளிலும் ஆடிய டி ப்ருய்ன், முத்துசாமி மற்றும் வெர்னான் ஃபிளாண்டர் ஆகிய மூவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது போட்டியில் ஓரங்கட்டப்பட்ட டேன் பீட் இந்த போட்டியில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபிளாண்டருக்கு பதிலாக லுங்கி இங்கிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி ப்ருய்னுக்கு பதிலாக ஹம்ஸா அணியில் இணைந்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர், டி காக், ஹம்ஸா, டுப்ளெசிஸ்(கேப்டன்), பவுமா, க்ளாசன்(விக்கெட் கீப்பர்), ஜார்ஜ் லிண்டே, டேன் பீட், ரபாடா, நோர்ட்ஜே, லிங்கி இங்கிடி. 
 

click me!