இந்தியாவிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு - டிம் பெய்ன்

By karthikeyan VFirst Published Nov 23, 2020, 10:04 PM IST
Highlights

இந்திய அணியிடம் முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததை நினைத்தால் இப்போது கூட வெறுப்பாக இருப்பதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளை தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடக்கவுள்ளது. 2018 - 2019ல் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி.

அந்த தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய அணியில் ஆடவில்லை. ஆனால் அவர்கள் ஆடாததால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றது என்று சொல்ல முடியாது. ஆனால் அதேவேளையில், அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு அனுகூலமாக அமைந்தது என்பதும் உண்மை.

எது எப்படியோ இந்தியாவின் வெற்றி வெற்றிதான். ஆஸ்திரேலியாவின் தோல்வி தோல்வி தான். வரலாற்று படுதோல்விக்கு, இந்த முறை மிகப்பெரிய வெற்றியை பெற்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இருந்தாலும், பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. 

இந்த முறை இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது இப்போதும் வெறுப்பாக இருக்கிறது. ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இருந்தாலும் இல்லையென்றாலும், தோல்வி டெஸ்ட் தொடரை இழப்பது என்பது மோசமானது என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
 

click me!