#AUSvsIND டெஸ்ட் தொடர்: தொடக்க வீரருக்கு குவியும் ஆதரவு

By karthikeyan VFirst Published Nov 23, 2020, 6:30 PM IST
Highlights

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரருக்கு தொடர்ந்து ஆதரவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 
 

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. கடந்த 2018-2019 சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. 

எனவே இந்த முறை இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி ஆடாதது அனுகூலமான விஷயமாக அமையும். 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் வார்னருடன் யார் தொடக்க வீரராக இறங்குவது என்பது விவாதமாக மாறியுள்ளது. வார்னருடன் கடந்த ஓராண்டாக தொடக்க வீரராக இறங்கிவந்த ஜோ பர்ன்ஸுக்கு பதிலாக இளம் வீரர் புகோவ்ஸ்கி தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் தொடக்க வீரராக ஜோ பர்ன்ஸ், தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும், வார்னருடன் இணைந்து தொடக்க ஜோடியாக ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துவந்திருக்கிறார். எனவே ஜோ பர்ன்ஸை நீக்குவதற்கு எந்தவித காரணமுமே இல்லை. காரணமே இல்லாமல், எந்த தவறும் செய்திராத பர்ன்ஸை நீக்க முடியாது என்றும் அதனால் வார்னரும் பர்ன்ஸுமே தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான்களான கில்கிறிஸ்ட், பாண்டிங் ஆகியோர் பர்ன்ஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பலும் அதே கருத்தைத்தான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டேவிட் வார்னரும் பர்ன்ஸுக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய வார்னர், என்னை பொறுத்தமட்டில் கடந்த கோடைக்கால தொடரில் ஜோ பர்ன்ஸ் எந்தவித தவறும் செய்யவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்புகளை அமைத்துள்ளோம். 60 என்கிற சராசரியில் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளோம். ஒரு தொடக்க ஜோடியாக நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்திருக்கிறோம். அதைவிட வேறு என்ன வேண்டும் என்று ஜோ பர்ன்ஸுக்கு ஆதரவாக வார்னர் பேசியுள்ளார்.

click me!