IPL 2022: ஐபிஎல் முதல் வாரத்தில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் ஆடவில்லை..? முழு பட்டியல் இதோ

Published : Mar 18, 2022, 10:23 PM IST
IPL 2022: ஐபிஎல் முதல் வாரத்தில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் ஆடவில்லை..? முழு பட்டியல் இதோ

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனின் முதல் வாரத்தில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் ஆடமாட்டார்கள் என்று பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக களமிறங்குவதால் 10 அணிகள் ஆடுவதால், இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும்.

ஐபிஎல் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்குவதால் அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. ஐபிஎல் தொடங்கும் நேரத்தில் சில சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடப்பதால், அந்த தொடர்களில் ஆடும் சில வீரர்கள்  ஐபிஎல்லில் முதல் வாரத்தில் ஆட வாய்ப்பில்லை.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடப்பதால், ஆரோன் ஃபின்ச், பாட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய வீரர்கள் ஐபிஎல் முதல் வாரத்தில் ஆடமாட்டார்கள். 

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையேயான தொடரில் ஆடிவரும் கைல் மேயர்ஸ், அல்ஸாரி ஜோசஃப் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவும் ஆட வாய்ப்பில்லை.

ஐபிஎல் 15வது சீசனில் முதல் வாரத்தில் ஆட வாய்ப்பில்லாத வீரர்கள்:

1. பாட் கம்மின்ஸ் (கேகேஆர்)
2. ஆரோன் ஃபின்ச் (கேகேஆர்)
3. க்ளென் மேக்ஸ்வெல் (ஆர்சிபி)
4. ஜோஷ் ஹேசில்வுட் (ஆர்சிபி)
5. மார்கஸ் ஸ்டோய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)
6. கைல் மேயர்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)
7. அல்ஸாரி ஜோசஃப் (குஜராத் டைட்டன்ஸ்)
8 . ஜானி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்)

ஜேசன் ராய், மார்க் உட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!