IPL 2022: கோலி இப்பதான் ரொம்ப டேஞ்சரஸான பிளேயர்.. எதிரணிகளை எச்சரிக்கும் மேக்ஸ்வெல்

Published : Mar 18, 2022, 07:48 PM IST
IPL 2022: கோலி இப்பதான் ரொம்ப டேஞ்சரஸான பிளேயர்.. எதிரணிகளை எச்சரிக்கும் மேக்ஸ்வெல்

சுருக்கம்

கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் கோலி இப்போது மிகவும் அபாயகரமான வீரர் என்று க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 2022:

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் 10 அணிகள் ஆடுவதால் ஐபிஎல் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். 

அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி:

ஐபிஎல் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளதால் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள பழைய அணிகளான ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன.

விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த ஃபார்மில் இல்லாமல் இருந்துவருகிறார். 2 ஆண்டுகளாக அவர் ஸ்கோர் செய்துவந்தாலும், அவரது சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை. 

இந்திய அணி மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த கோலி, அனைத்துவிதமான கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார். இந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஒரு வீரராக மட்டுமே ஆடவுள்ளார். கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் விராட் கோலி பேட்டிங்கில் மட்டும் முழு கவனம் செலுத்துவதால் அவரிடமிருந்து சிறந்த பேட்டிங் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில் விராட் கோலி 405 ரன்கள் அடித்து, கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 12வது வீரராக சீசனை முடித்தார். கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் ஆடும் கோலி, பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,  அதைத்தான் அவரது ஆர்சிபி சக வீரரான க்ளென் மேக்ஸ்வெல்லும் தெரிவித்திருக்கிறார்.

மேக்ஸ்வெல் கருத்து:

இதுகுறித்து பேசிய க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி கேப்டன் பதவியை துறந்ததால் கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் இந்த சீசனில் ஆடுகிறார். கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் கோலி ஆடுவது எதிரணிகளுக்கு அபாயகரமான செய்தி. கேப்டன்சி அழுத்தம் இல்லாத கிரிக்கெட்டை சில ஆண்டுகள் கோலி அனுபவிக்கட்டும் என்றார் மேக்ஸ்வெல்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!