லெண்டல் சிம்மன்ஸின் ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! Captain Dhoni

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 3:05 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எவின் லூயிஸ், டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் சிம்மன்ஸ். கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமல்லாது, ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக் என உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் ஆடி 1000 சிக்ஸர்களுக்கு மேல் விளாசியுள்ளார்.

ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000க்கும் அதிகமான ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் விளாசியுள்ள ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர்.

3ம் வரிசையில் விராட் கோலியை தவிர வேறு வீரரை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தவகையில் 3ம் வரிசையில் கோலியையும், 4ம் வரிசையில் தென்னாப்பிரிக்க அதிரடி மன்னன் டிவில்லியர்ஸையும், 5ம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்டையும் தேர்வு செய்துள்ளார் லெண்டல் சிம்மன்ஸ். கைரன் பொல்லார்டும் கெய்ல் மாதிரிதான். ஐபிஎல் உட்பட உலகின் முன்னணி டி20 லீக் தொடர்கள் அனைத்திலும் ஆடி டி20 கிரிக்கெட்டில் அபரிமிதமான அனுபவத்தை கொண்டவர்.

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள சிம்மன்ஸ், அவரைத்தான் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட 2007ல் முதல் டி20 உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனி தான். களவியூகங்கள், வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்தல் ஆகிய கேப்டன்சி விஷயங்களில் தோனிக்கு நிகர் தோனியே என்ற வகையில், தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் லூயிஸ்.

கெய்ல், பொல்லார்டை போல், உலகம் முழுதும் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடி, டி20 கிரிக்கெட்டின் சாம்பியன் வீரராக ஜொலித்த ட்வைன் பிராவோவை ஆல்ரவுண்டராக எடுத்துள்ளார் சிம்மன்ஸ். பிராவோ அண்மையில் முடிந்த டி20 உலக கோப்பையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றார்.

ஸ்பின்னர்களாக சுனில் நரைன் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் ககிசோ ரபாடா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் சிம்மன்ஸ்.

லெண்டல் சிம்மன்ஸின் ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், கைரன் பொல்லார்டு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ககிசோ ரபாடா.
 

click me!