LPL 2021: லங்கா பிரீமியர் லீக் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் Sky247

By karthikeyan VFirst Published Dec 14, 2021, 7:44 PM IST
Highlights

உலகம் முழுதும் கிரிக்கெட் ஆடும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. அந்தவரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது. இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. லங்கா பிரீமியர் லீக் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் Sky247 சேனல்

உலகம் முழுதும் கிரிக்கெட் ஆடும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக், வங்கதேசத்தில் வங்கதேச பிரீமியர் லீக், இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. லங்கா பிரீமியர் லீக் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் Sky247 சேனல்.

லங்கா பிரீமியர் லீக் Sky247-யால் வழங்கப்படுகிறது. இலங்கையின் அழகான 5 நகரங்களின் பெயர்களை கொண்ட அணிகள் ஆடுகின்றன. ஜாஃப்னா கிங்ஸ், டம்புல்லா ஜெயிண்ட்ஸ், கல்லே க்ளாடியேட்டர்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ், கண்டி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் Sky 247 எல்பிஎல்(லங்கா பிரீமியர் லீக்) தொடரில் ஆடுகின்றன. முதல் சீசனில் கோப்பையை வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த சீசனில் ஆடுகிறது.

இந்த சீசனில் அனைத்து அணிகளும் 5 போட்டிகளில் ஆடிய நிலையில் (கல்லே க்ளாடியேட்டர்ஸ் மட்டும் 6 போட்டிகள்) ஜாஃப்னா கிங்ஸ் ஆடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது.  டம்புல்லா ஜெயிண்ட்ஸ் 4 வெற்றிகளையும், கல்லே கிளாடியேட்டர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 

கண்டி வாரியர்ஸ் அணி ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 181 ரன்களை குவித்த கொழும்பு ஸ்டார்ஸ் அணி வீரர் தினேஷ் சண்டிமால் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்த சமித் படேல் அதிகபட்சமாக 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

கடந்த Sky247 லங்கா பிரீமியர் லீக்கில் ஆடியதை விட இந்த சீசனில் அதிகமான சர்வதேச வீரர்கள் ஆடுகின்றனர். வஹாப் ரியாஸ், ஷோயப் மாலிக், சமித் படேல், ரவி ராம்பால், ரோவ்மன் பவல், டாம் கோலர் உட்பட பல வீரர்கள் ஆடுகின்றனர்.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் லீக் சுற்றில் இன்னும் 7 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதன்பின்னர் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்கின்றன. டிசம்பர் 23ம் தேதி இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. ஹம்பண்டோட்டாவில் ஃபைனல் நடக்கிறது. இதுவரை இந்த சீசனில் பல சுவாரஸ்யமான போட்டிகள் நடந்துள்ள நிலையில், இன்னும் சுவாரஸ்யமான போட்டிகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
 

click me!