#IPL2021 இந்த சீசனிலும் சிஎஸ்கே டம்மி தான்! அந்த 4 அணிகள்தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும்- முன்னாள்வீரரின் தேர்வு

Published : Apr 16, 2021, 04:04 PM IST
#IPL2021 இந்த சீசனிலும் சிஎஸ்கே டம்மி தான்! அந்த 4 அணிகள்தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும்- முன்னாள்வீரரின் தேர்வு

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் எந்தெந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என்று முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்பூட் கருத்து தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை பலமுறை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்வதில் மிகத்தீவிரமாக உள்ள நிலையில், இந்த சீசனில் எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என்று முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்பூட் ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் பேசியுள்ளார்.

5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ், கடந்த சீசனின் ஃபைனலிஸ்ட் டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என்று லால்சந்த் ராஜ்பூட் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறாது என்கிற வகையில், சிஎஸ்கேவை தேர்வு செய்யவில்லை ராஜ்பூட். 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!