#PBKSvsCSK ஜெயிச்சே தீரணும்.. சிஎஸ்கே அணியில் மாற்றமா..? உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 16, 2021, 02:35 PM IST
#PBKSvsCSK ஜெயிச்சே தீரணும்.. சிஎஸ்கே அணியில் மாற்றமா..? உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும், முதல் போட்டியில் தோல்வியடைந்த சிஎஸ்கே அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் களம் காண்கின்றன.

இந்த போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே அணி களமிறங்கும். முதல் போட்டியில் சிஎஸ்கே தோற்றிருந்தாலும், அணியில் மாற்றத்தை செய்ய வேண்டியதற்கான அவசியம் இல்லாத அளவிற்கான ஆடும் லெவன் காம்பினேஷனைத்தான் சிஎஸ்கே பெற்றிருக்கிறது.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டுப்ளெசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?