இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ..! எந்தெந்த பிரிவில் எந்தெந்த வீரர்கள்?

Published : Apr 15, 2021, 10:27 PM IST
இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ..! எந்தெந்த பிரிவில் எந்தெந்த வீரர்கள்?

சுருக்கம்

இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடும் வீரர்களை ஏ+, ஏ, பி, சி ஆகிய பிரிவுகளாக பிரித்து ஊதிய ஒப்பந்தத்தை வெளியிடும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

28 வீரர்கள் பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஏ+ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.7 கோடி) - விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா.

ஏ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.5 கோடி) - ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, தவான், கேஎல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா.

பி பிரிவில் உள்ள வீரர்கள்(ரூ.3 கோடி) - ரிதிமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், மயன்க் அகர்வால்.

சி பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.1 கோடி) - குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்ஸர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!