#PBKSvsCSK ஆடுகளத்துக்கு ஏற்ற அசத்தலான டீம்.. பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 16, 2021, 03:16 PM IST
#PBKSvsCSK ஆடுகளத்துக்கு ஏற்ற அசத்தலான டீம்.. பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களம் காண்கிறது. 

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவான அணிகளாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக மும்பை வான்கடே ஆடுகளத்திற்கு ஏற்ற ஆடும் லெவன் காம்பினேஷனாக உள்ளது.

பேட்டிங்கிற்கு சாதகமான மும்பை வான்கடே ஆடுகளம், ஸ்பின்னிற்கு சுத்தமாக ஒத்துழைப்பு தராது. அந்தவகையில், ராகுல், அகர்வால், கெய்ல், ஹூடா, பூரன், ஷாருக்கான் என வலுவான பேட்டிங் ஆர்டரையும், ஷமி, அர்ஷ்தீப் சிங், மெரிடித், ரிச்சர்ட்ஸன் என நல்ல ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டையும் பெற்றுள்ளது. 

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஷாருக்கான், ஜெய் ரிச்சர்ட்ஸன், முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!