அது எங்களோட தப்பு இல்ல.. அஷ்வின் குறித்து குல்தீப் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 4, 2019, 5:14 PM IST
Highlights

ஆஃப் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தரமான ஸ்பின்னர் என்றைக்குமே தரமான ஸ்பின்னர் தான். அந்த வகையில் இப்போதும் அஷ்வின் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்தான். 

தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடி, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக பந்துவீசினர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்தனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து எதிரணி பேட்ஸ்மேன்களையும் தெறிக்கவிடுகின்றனர். 

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஆடாத அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் இன்னும் கணிக்காததால், அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறுகின்றனர். இவர்கள் இருவருமே உலக கோப்பையில் ஆட உள்ளனர்.

ஆனால் அஷ்வின் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் கவுதம் காம்பீர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். ஆஃப் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தரமான ஸ்பின்னர் என்றைக்குமே தரமான ஸ்பின்னர் தான். அந்த வகையில் இப்போதும் அஷ்வின் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்தான். அதனால் அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியிருந்தார். 

உள்நாட்டில் மட்டுமே அஷ்வின் சிறப்பாக வீசியுள்ளதாகவும், வெளிநாட்டு தொடர்களை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தான் சிறப்பாக வீசியுள்ளதாகவும் அதனால் குல்தீப்பே சிறந்த ஓவர்சீஸ் பவுலர் என்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். அஷ்வினை டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓரங்கட்ட இருப்பதை மறைமுகமாக ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவதில் தவறில்லை. அதேநேரத்தில் அஷ்வினின் திறமையை குறைத்து மதிப்பிடுவது என்பது தவறான செயல். அதைத்தான் சாஸ்திரி செய்தார்.

ஜடேஜா கூட அவ்வப்போது ஒருநாள் அணியில் இடம்பெறுகிறார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரில் கூட ஜடேஜா இருக்கிறார். ஆனால் அஷ்வின் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். 

அஷ்வின் - ஜடேஜா இடத்தை குல்தீப் - சாஹல் ஆகிய இருவரும் இறுக்கமாக பிடித்துவிட்டனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், அஷ்வினும் ஜடேஜாவும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட நாங்கள் காரணமல்ல. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி நன்றாக வீசினோம். அணியின் வெற்றிக்காக சிறப்பாக வீச வேண்டும் என்ற முனைப்பில் வீசினோம். அணியும் வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக சிறப்பாக வீசி வெற்றி தேடிக்கொடுப்பது மகிழ்ச்சி. நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினோமே தவிர, அவர்கள் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவதற்கு நாங்கள் காரணமல்ல. அஷ்வினும் ஜடேஜாவும் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக இன்னும் சிறப்பாக வீசி கொண்டிருப்பவர்கள் என்று குல்தீப் யாதவ் தெரிவித்தார். 
 

click me!