ஐபிஎல்லின் பெஸ்ட் கேப்டன் யார்? விராட் கோலி - ரோஹித் சர்மா - தோனி.! சங்கடமான கேள்விக்கு இளம் வீரரின் நச் பதில்

By karthikeyan VFirst Published Jun 26, 2020, 9:13 PM IST
Highlights

ஐபிஎல்லின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் பதிலளித்துள்ளார். 
 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸும், சிஎஸ்கேவும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறையும் ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளன. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, சிஎஸ்கேவை விட ஒருமுறை அதிகமாக கோப்பையை வென்றிருந்தாலும், சிஎஸ்கே தான் மும்பை இந்தியன்ஸை விட ஒரு படி கூடுதல் சிறந்த அணி என்பது பொதுக்கருத்து. 

சிஎஸ்கே அணி இதுவரை 10 சீசன்களில் ஆடி அதில் 8 சீசனில் இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. ஒரு சீசனில் கூட லீக் சுற்றுடன் வெளியேறியதில்லை. எனவே சிஎஸ்கே அணி ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாகவும் தோனி வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்கிறார். ரோஹித் சர்மாவும் சிறந்த கேப்டனாக திகழ்கிறார். 

பொதுவாகவே, நெருக்கடியான சூழல்களை தோனியை போலவே அமைதியாக இருந்து நிதானமாக எதிர்கொள்பவர் ரோஹித் சர்மா. ஆனால் விராட் கோலி இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். மிகுந்த ஆக்ரோஷமானவர். கோலி ஐபிஎல்லில் ரன்களை அதிகமாக குவித்தாலும், அவர் தலைமை வகிக்கும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட தனது அணிக்கு கோப்பையை வென்றுகொடுக்கவில்லை. ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக கோலி சாதிக்கவில்லை என்பதே, கோலியின் கேப்டன்சி மீதான விமர்சனத்துக்கு, வழிவகுக்கின்றன.

எனவே ஐபிஎல்லில் வெற்றி விகிதம், புள்ளிவிவரம் ஆகியவற்றின் அடிப்படையில் கோலியை விட ரோஹித் தான் சிறந்த கேப்டன். இந்நிலையில், ஆங்கில கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு கர்நாடகாவை சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் கிருஷ்ணப்பா கௌதம் பேட்டியளித்தார். 

அப்போது கோலி - ரோஹித் - தோனி ஆகிய மூவரில் யார் சிறந்த ஐபிஎல் கேப்டன் என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணப்பா கௌதம், விராட் கோலியை விட ரோஹித் சர்மா தான் கண்டிப்பாக சிறந்த கேப்டன். ஆனால் ஐபிஎல்லின் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான் என்றார். 

ரோஹித் சர்மாவின் தலைமையில் 2017 ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அந்த அணியில் ரோஹித் சர்மாவின் தலைமையில் கிருஷ்ணப்பா கௌதம் ஆடியது குறிப்பிடத்தக்கது. 
 

click me!