பெங்காலி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கௌதம் காம்பீர் பத்திரிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 28ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு முன்னதாக நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரான கௌதம் காம்பீர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
இதுவரையில் கௌதம் காம்பீரை ஆக்ரோஷமாகவும், கோபமாகவும் தான் ஒவ்வொருவரும் பார்த்திருப்போம். ஆனால், அவரது மறுபக்கம் பற்றி யாருமே அறிந்திருக்கமாட்டோம். உண்மையில் கௌதம் காம்பீர் ஒரு இனிமையான மனிதர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இன்று பெங்கால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெங்காலியின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகையான ரசகுல்லாவை பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்து தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய கௌதம் காம்பீர் கூறுகையில், நாளைக்கு புத்தாண்டு. ஆகையால் உங்களுக்காக எங்களிடம் இனிப்புகள் உள்ளன. தயங்காமல் கொஞ்சம் கலோரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷூபோ நோபோபோர்ஷோ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.
শুভ নববর্ষ Shubho Noboborsho to everyone! pic.twitter.com/QFEU7lYRac
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir)